முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 14, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையத்தை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடங்குகிறது. உலக மகளிர் தின கொண்டாட்டத்தில் 1500-க்கும் மேலான பெண்கள் பங்கேற்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களின் ஒட்டுமொத்த நலனை குறிக்கோளாகக் கொண்டு, தூத்துக்குடி நகரில் பெண்கள்  மேம்பாட்டு வளர்ச்சி மையம் தொடங்கப்படுவதை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இன்று அறிவித்திருக்கிறது.  உலக மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையம், தொழில்முனைவு செயல்பாட்டின் வழியாக, பொருளாதார ரீதியாக தற்சார்புள்ளவர்களாக பெண்கள் முன்னேறுவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.  தொழிற்முனைவோர்க்கான முக்கிய மூன்று தேவைகள் நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்நுட்ப வர்த்தகத்திற்கு வழிவகுத்தல். மேற்கூறிய மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான வசதிகளாகிய  நுண்கடன் திட்டம், திறன் மேம்பாடு  மற்றும் வளர்ச்சி மையம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வழங்க உறுதிகொண்டுள்ளது. இன்று நடைபெற்ற ஒரு சிறப்பான விழாவில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் ச...