முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊராட்சி சபையில் உதயா நீதி ஸ்டாலின்



தி.மு.க.சார்பில்
முடிவைதானேந்தலில் ஊராட்சி சபை கூட்டம் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்


தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
அதன் பொருட்டு திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன.

இந்தநிலையில் நடிகரும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.   

தேவேந்திர குல வேளாளர் சாதியில் குறிப்பிட்ட 7 பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இருந்து வெளியேற்ற திமுக ஆதரவு தர வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், தாமிரபரணி குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்,
இங்கு சொல்லப்பட்ட பெரும்பாலான பிரச்சனைகள் உள்ளாட்சி அமைப்பால் தீர்க்கப்பட வேண்டியவை. பஞ்சாயத்து அமைப்பு சரியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காது.

4 வருடத்துக்கு முன் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் எங்கே திமுக வென்றுவிடுமோ என்ற அச்சத்தில் தான் தேர்தலை நடத்தாமல் உள்ளது இந்த அரசு. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...