முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பதில் அளிக்காமல் இருந்தால் பணி நீக்கம்

     


பதிவு: பிப்ரவரி 26,  2019 04:15 AM
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார்  விடுத்துள்ளார்                        தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடத்த மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தேனிக்கு நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். இதற்காக மேல்முறையீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில், மேல்முறையீடு செய்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் மேல் முறையீடு செய்தவர்கள் 15 பேர் கலந்துகொண்டனர்.

விசாரணையை தொடர்ந்து அரசின் பல்வேறு துறை அலுவலக பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கலந்துகொண்டு பேசினார். இந்த விசாரணை மற்றும் விழிப்புணர்வு கூட்டத்தை தொடர்ந்து பிரதாப்குமார் கூறியதாவது:-

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல் அளிக் கப்படாத 15 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்துவதற்காக வந்தேன். கலெக்டர் அலுவலகம், பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்றவற்றில் பதில் அளிக் கப்படாத மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
   பொதுமக்கள் அரசிடம் இருந்து தேவையான தகவல் களை பெறுவதற்காக உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன. அவ்வாறு இல்லாமல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத அலுவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலரை பணி நீக்கம் செய்யவும் துறை செயலாளருக்கு பரிந்துரை செய்யும் அதிகாரமும் தகவல் ஆணையருக்கு உள்ளது. எனவே, அரசு துறை அலுவலர்கள் இச்சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் .  "  நன்றி தினதந்தி                           

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...