முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையத்தை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடங்குகிறது.
உலக மகளிர் தின கொண்டாட்டத்தில் 1500-க்கும் மேலான பெண்கள் பங்கேற்றனர்.

 தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களின் ஒட்டுமொத்த நலனை குறிக்கோளாகக் கொண்டு, தூத்துக்குடி நகரில் பெண்கள்  மேம்பாட்டு வளர்ச்சி மையம் தொடங்கப்படுவதை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இன்று அறிவித்திருக்கிறது.  உலக மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையம், தொழில்முனைவு செயல்பாட்டின் வழியாக, பொருளாதார ரீதியாக தற்சார்புள்ளவர்களாக பெண்கள் முன்னேறுவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.  தொழிற்முனைவோர்க்கான முக்கிய மூன்று தேவைகள் நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்நுட்ப வர்த்தகத்திற்கு வழிவகுத்தல். மேற்கூறிய மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான வசதிகளாகிய  நுண்கடன் திட்டம், திறன் மேம்பாடு  மற்றும் வளர்ச்சி மையம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வழங்க உறுதிகொண்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஒரு சிறப்பான விழாவில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  திரு. பி. ராம்நாத், இந்த மேம்பாட்டு வளர்ச்சி மையத்தை தொடங்கிவைத்தார்.  தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 1500-க்கும் மேலான பெண்கள் இந்நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் இந்த மகளிர் மேம்பாட்டு வளர்ச்சி மையத்தின் பயன்களை பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். தூத்துக்குடியில்  வாழும் பெண்கள் இந்த வளர்ச்சி மையத்துடன் தொடர்பு கொள்ளவும் மேற்கூறிய பல்வேறு பயன்களை பெறவும்  ஒரு குழுவை அமைத்து அதன் தலைவராக கேப்டன் சோனிகா முரளிதரன் அவர்களை நியமித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்  பி. ராம்நாத், பெண்களுக்கான இந்த சிறப்புத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “பெண்கள் திறனும், அதிகாரமும் பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் தொடர்ந்து ஆற்றி வந்திருக்கிற பணியின் ஒரு தொடர் நிகழ்வாக இம்மையம் தொடங்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் 500 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற இலக்கை கொண்டிருக்கிற நாங்கள், இவர்கள் ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் வேறு பிற ஐந்து பெண்களுக்கு வேலைவாய்ப்பு தரும் அளவிற்கு திறன் உள்ளவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு செயல்பட இருக்கின்றோம்.  இதன் மூலம் முதல் ஆண்டின் இறுதிக்குள் 3000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதிசெய்யப்படும்.  தூத்துக்குடியில் சுயசார்புள்ள 9,000 பெண் தொழில்முனைவோர்களை உருவாக்குவது எங்களது நோக்கமாகும். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 30,000 நபர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோளாகும்” என்று கூறினார்.
இப்பிராந்தியத்தில் பெண்களின் நலனிற்கான இத்திட்டத்தை தலைமையேற்று செயல்படுத்துவதில் நான் மிகப்  பெருமிதம் கொள்கிறேன். வங்கிகள், வங்கிசாரா நிதிநிறுவனங்கள் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் உட்பட, பல்வேறு அமைப்புகளுடன் நாங்கள் கூட்டாண்மையாக இணைந்து செயல்பட்டு, தூத்துக்குடி பெண்களுக்கு முன்னேற்றத்திற்கான வளர்ச்சியை உறுதிசெய்ய ஒரு சரியான சூழலை நாங்கள் உருவாக்க இருக்கிறோம். இந்த மையம் தூத்துக்குடி பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்பதை குறிக்கோலாய் கொண்டு மிகப்பெரிய மாற்றத்தை  உருவாக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், என்று பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையத்தின் தலைமை அலுவலர் கேப்டன் சோனிகா கூறினார்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் மாநில அரசின் கௌரவம் மிக்க உயர் விருதைப் பெற்றவரான கலைமாமணி ஜி.முத்துலட்சுமி,  சிறப்பான  “வில்லுப்பாட்டு” கலை நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற பெண்கள்,வரவிருக்கும் தேர்தலின்போது பொறுப்புணர்வுடன் வாக்களித்து, முன்னேற்றத்தையும், தொழில்வளர்ச்சியையும் நோக்கமென கொண்டுள்ள ஒரு சிறந்த வேட்பாளரை தேர்வு செய்வோம் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றினர்.   ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சமூக உட்கட்டமைப்பு திட்டங்கள் பெண்களுக்கு அதிக அளவிலான பலன்களை வழங்கியிருக்கிறது என்பதையும் பெண்களுக்கான சுயஉதவி குழுக்களுக்கு ஸ்டெர்லைட் தொடர்ந்து ஆதரவளித்து வந்திருக்கிறது என்பதையும் நன்றியுடன் சுட்டிக்காட்டினார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்