*தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் இருவர் வெட்டிகொலை : தூத்துக்குடியில் பரபரப்பு

*தூத்துக்குடியில்இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால்  இருவர் வெட்டிகொலை : தூத்துக்குடியில் பரபரப்பு*

தூத்துக்குடி  சிவந்தாகுளம் பகுதியில் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால்  இருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (38) மெரைன் இன்ஜினியராக உள்ளார்.அவரது நண்பர் பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் (38) இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தகுளம் பகுதியில் இன்று மாலை நின்று கொண்டு இருந்த போது, அங்கே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர்களை அக்கம்பக்கத்தில் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சையாக கொண்டு வந்துள்ளனர்.ஆனால் அவர்கள் கொண்டு வரும் வழியே பரிதாபமாக  உயிரிழந்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இன்று பிற்பகல்  கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலையான இருவர் கன்டித்ததாகவும் கூறப்படுகிறது.இதனையடுத்து இக்கொலைச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.                                      

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்