முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திறந்த நிலையில் இருக்கும் குடி நீர் வால்வு தொட்டி '

  தூத்துக்குடி
அமுதாநகர், கிருபைநகர் நடுரோட்டில் மூடி இல்லாமல், திறந்த நிலையில் கிடக்கும் குடிநீர் வால்வு தொட்டிகளால் உயிருக்கு ஆபத்து
      தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா ?
           திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி வருகிறது
           இந்நிலையில. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் வால்வு தொட்டிகள் மூடி இல்லாமலும், சேதமடைந்தும் காணப்படுகின்றன இவற்றில் பல, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், பெரும்பாலான தொட்டிகளில் மேல்மூடி இல்லாத நிலையிலேயே கிடக்கிறது. மேலும் பல தொட்டிகள் உடைந்தும், சேதமடைந்தும் பாதுகாப்பற்ற நிலையில் கிடக்கிறது.
          குறிப்பாக தெற்கு மண்டலத்தில் உள்ள, அமுதாநகர் 3வது தெருவில் (கிருபைநாதர் ஆலயத்திற்கு பின்புறம்) 2 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் வால்வு தொட்டி, மேல்மூடியே இல்லாமல், திறந்த நிலையில் கிடக்கிறது. சாலையின் நடுவிலும், முக்கிய திருப்பத்திலும் இத்தொட்டி அமைந்து உள்ளதால், அப்பகுதியில் உள்ளவர்கள் இவ்வழியே வாகனங்களில் செல்லும் போது, ஒரு பக்கமாக விலகியே செல்கின்றனர். அதே நேரத்தில் வெளியூரை சேர்ந்த பலர் இத்தொட்டியில் தவறி விழுந்து காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
         மேலும் அதனை அடுத்துள்ள கிருபைநகரில் இருந்து, 3வது மைல் பகுதிக்கு திரும்பும் முக்கிய சாலையின் நடுவில் உள்ள குடிநீர் வால்வு தொட்டியின் மேல்மூடி, சரியாக அமைக்காமல், அரைகுறையாகவே கிடக்கிறது. இந்த தொட்டியால் பலர் தடுக்கி விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
          இந்த குடிநீர் வால்வு தொட்டிகள் அமைந்திருப்பது, குடியிருப்பு பகுதி என்பதாலும், குழந்தைகள்அதிகம் நடமாடும் பகுதி என்பதாலும், இப்பிரச்சனையில் தனி கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.
மேலும், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த தொட்டிகளால் தடுக்கியோ, தவறியோ விழுந்து  உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
          எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், மேற்படி குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு, சரியான அளவிலான மேல்மூடிகளை பொருத்திட மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்