முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயம;



திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில்
 டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்று காலையில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. 
அந்த பஸ்சை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த துரை  - வயது 37  ஓட்டிச் சென்றார். பஸ்சில் 
  சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர்.
திருச்செந்தூர் அருகே கோயில்விளையை கடந்து சென்றபோது,முன்னால் சென்ற வேனை 
பஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது நிலைதடுமாறிய பஸ்,சாலையின் வலதுபுறத்தில் 
உள்ள மரங்களின் கிளைகளில் மோதியவாறு சென்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி 
முழுவதும் நொறுங்கி விழுந்தது. இதில் டிரைவர் துரை காயமடைந்தார். உடனே டிரைவர்
 திடீரென்று ‘பிரேக்‘ பிடித்து பஸ்சை நிறுத்தினார்.
       அப்போது பஸ்சின் முன்பக்கத்தில் தனி இருக்கையில் இருந்த பாளையங்கோட்டை
 சமாதானபுரத்தைச் சேர்ந்த ஜெயா - [25]  நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்து காயமடைந்தா
இந்த விபத்தில் காயம் அடைந்த ஜெயா, டிரைவர் துரை ஆகிய 2 பேரையும் திருச்செந்தூர் 
அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக சாலையோர மரத்தில் பஸ் மோதாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...