சமூக இடைவெளி பின்பற்றாத கடைகள் மீது அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

கரோனா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மேலும் வெளியில் செல்லும் போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று தெற்கு புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. எனவே சம்பந்தபட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவது தெரிய வந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்