முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈரான் நட்டிலிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்த மீனவர்கள் இந்திய கப்பல் படை சேர்ந்த JALASWA கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வருகை


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு ஈரான் நாட்டில்; இருந்து இந்திய கடற்படைக்கு சேர்ந்த  JALASHWA    கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 687 மீனவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (01.07.2020) அன்று
நடைபெற்றது.
 
       இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு       ஈரான் நாட்டில் இருந்து இந்தியகடற்படைக்கு சேர்ந்த JALASHWA   கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 687 மீனவர்களை வரவேற்று, பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் கைகளை சுத்தம் செய்தற்கு சாணிடைசர் வழங்கப்பட்டதையும், உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை கண்டறிய செய்யப்பட்ட தெர்மல் ஸ்கிரினிங் பணிகளையும் பார்வையிட்டார்

 . இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப.,   சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேலும்
பேருந்துகளில் மீனவர்களை அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் மாவட்ட வாரியாக பிரித்து, குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளை சோதனை செய்யும் பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு, குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மீண்டும் பேருந்துகளில் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பார்வையிட்டார்.

     பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
 கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக
மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவினை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுய ஊரடங்கு உத்தரவினை நீடித்துள்ளார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் காணொலி காட்சி  வாயிலாக மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு செய்து
மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு கொரோனா தொற்று நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக தொடர் நடவடிக்கைகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் எந்த ஒரு தளர்வும்  இல்லாமல் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தை சார்ந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்தார்கள். இந்த இக்கட்டான நோய் தொற்று காலத்தில் அவர்கள் சொந்த  மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் நமது மாவட்டத்தை சார்ந்த சுமார் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருகை தந்துள்ளார்கள்.
மேலும், வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்ப வேண்டும் என பல்வேறு நபர்கள்       அரசிற்கு தெரிவித்து வந்தார்கள். இந்த கோரிக்கையினை உடனடியாக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  மத்திய அரசுக்கு கடிதம் எழுதி மீண்டும் அவர்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளை  மேற்கொண்டார்கள்.


      குறிப்பாக ஈரான் நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில்
ஈடுபட்டு கொண்டு இருந்த மீனவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை வைத்தன் அடிப்படையில் இன்று இந்திய கடற்படைக்கு சேர்ந்த  JALASHWA  கப்பல் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 514 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 33 மீனவர்களும், கேரள மாநிலத்தை சார்ந்த 38 மீனவர்கள் மற்றும் பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்த பல்வேறு மீனவர்கள் என மொத்தம் 687 மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்கள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் உடனடியாக தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்பட்டு குடிவரவு நுழைவு, உடமைகளை சோதனை செய்து அவர்களது சொந்த மாவட்டத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி துறைமுகை பொறுப்புக்கழகம், சுங்கத்துறை அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அன்டை மாநில மக்களும் மீட்டு வர உதவி செய்து  தாய் உள்ளம் கொண்ட கருணை மிக்க முதலமைச்சராக நமது முதலமைச்சர் திகல்ந்து வருகிறார். இந்த இக்கட்டான காலகட்டத்தில் கோரிக்கை வைத்ததுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இன்று பாதுகாப்பாகதாயகம் திரும்ப   வைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலiமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.



தூத்துக்குடி விமான நிலையம் 2 விமானங்களை கொண்டு இயங்கியது. பின்னர் 5 விமானங்களுடன் சென்னை, பெங்களுர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு தூத்துக்குடி விமான நிலையம் விரிவுபடுத்துவதற்காக 2018 டிசம்பர் 31ம் தேதி அன்று 601 ஏக்கர் நிலம் கையெடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விமான நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. தற்போது இரவு நேரங்களிலும் விமானங்கள் இயக்குவதற்காக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், 93
ஏக்கர் நிலம் நிலம் கையெடுக்கப்படும் பணிகள் நடைபெற உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலiமைச்சர் அவர்கள் தூத்துக்குடி விமான நிலையம் பன்னட்டு விமான நிலையமாக தரம் உயர்த தேவையான உதவிகள் தமிழக அரசு செய்து தரும் என அறிவித்ததை தொடர்ந்து  பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.



நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் திரு.வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் திரு.பிமல் குமார் ஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.எம்.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., துறைமுக பொறுப்புக்கழக
முதன்மை பொறியாளர் திரு.ரவிகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.மாரியப்பன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, வட்டாட்சியர்கள் திரு.ரகு(ஓட்டப்பிடாரம்), திரு.மணிகண்டன் (கோவில்பட்டி), திரு.செல்வகுமார்(தூத்துக்குடி),
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மன்னர்மன்னன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பிரிவு மேலாளர் திரு.கண்னன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.கிருஷ்ணலிலா, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சசிகுமார், முக்கிய பிரமுகர்கள் திரு.ஆறுமுகநயினார், திரு.குணசேகரன் மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலர்கள்; கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...