முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைன்ட் நகர், டூவிபுரம்;, மேலசண்முகபுரம் மற்றும் ஸ்பிக் நகர் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைன்ட் நகர் 8வது தெரு, டூவிபுரம் 
இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரு, மேலசண்முகபுரம் வன்னார் இரண்டாவது தெரு மற்றும் ஸ்பிக் நகர் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 
மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.07.2020) 
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நோய் கட்டுப்பாட்டு பகுதியில் 
உள்ள அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மேலும் இப்பகுதியில் எந்த ஒரு தளர்வும் அனுமதிக்க கூடாது எனவும், கொரோனா தடுப்பு பணிகளை இப்பகுதியில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டநபர்களின்தொடர்பாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் டூவிபுரம் நான்காவது தெருவில் அமைந்துள்ள சங்கரநாராயணன் பூங்காவில் மாநகராட்சி மூலம் காய்ச்சல் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளை 
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் சிகிச்சை அளிக்க ஏதுவாக 50 படுக்கைகள் உடன் கோவிட் கேர் சென்டர் அமைத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அங்கு பணியாற்றிடதேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.                                                                                                                         பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப்நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்தாவது:                                                                                          தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 
தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்        மேற்கொள்ளப்படுகிறது. சளி,     காய்ச்சல், இரும்பல் போன்ற அறிகுறி உள்ள நபர்கள் உடனடியாக 
மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 
மேலும், தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நோய் 
கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் 
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைன்ட் நகர், டூவிபுரம்;, மேலசண்முகபுரம் மற்றும் ஸ்பிக் நகர் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளபடி, பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளி வர வேண்டும். வீட்டில் இருந்து வெளி வரும்போது கட்டாயமாக முககவசங்கள் அணிந்து, சமூகஇடைவெளியைகடைபிடிக்கவேண்டும்.மாவட்டநிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.                                                                                                                        
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், 
இ.ஆ.ப., மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.அருண்குமார், உதவி பொறியாளர் 
திரு.ராமசந்திரன், ஸ்பிக் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (நிர்வாகம்) 
திரு.ஜெயபிரகாஷ்,சுகாதாரஅலுவலர்கள் திரு.ஸ்டாலின், திரு.ராஜசேகர் மற்றும் 
அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்