முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கொரோனா தொற்று பரிசோதனை 2 ஆர்டிபிசிஆர் கருவிகளை துவக்கி வைப்பு .

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 
தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாண்புமிகு சுகாதாரத்துறை 
அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் இன்று (18.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வகைகள் வழங்கிடவேண்டும்.இதற்குதேவைப்பட்டால் கூடுதலாக பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் ஈடுபடுத்திட வேண்டும். அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிசிச்சைகளை அளித்திட வேண்டும். தூத்துக்குடி மருத்துவமனையில் ஆக்சிசன் 
லைன் படுக்கைகளுக்கு ஏற்றவாறு தேவையான அளவு அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள். கூட்டத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்திரு.எஸ்.பி.சண்முகநாதன்(திருவைகுண்டம்),திரு.சின்னப்பன்(விளாத்திக்குளம்)ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பின்னர் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:          
 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், தமிழகம் முழுவதும்கொரோனாதடுப்புநடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள்வழிகாட்டுதலின்படி தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம்   _.  தூத்துக்குடி மாநகராட்சி, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கொரோனா தொற்று தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.தூத்துக்குடி அரசுமருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் இதுவரை 1,405 நோயாளிகள் பூரணம் குணம் பெற்று வீடுதிரும்பியுள்ள நிலையை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 
தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,601 கர்ப்பிணி தாய்மார்கள்மீது சிறப்பு கவனம் செலுத்தி தனியாhக வார்டுகள் அமைத்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். 
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 52 தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தாயும், சேயும் குணப்படுத்தியுள்ளார்கள். மேலும் பிறந்த குழந்தைக்கு கொரோனா 
தொற்றுஅறிகுறிதென்பட்டால்உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு பூரணம் 
குணம் பெற தேவையான நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது. உலக அளவில் வல்லரசு நாடுகள் கூட கூடுதல் படுக்கை வசதிக்கே திணறிக்கொண்டு இருக்கிற இந்த கால கட்டத்தில், மாண்புமிகு அம்மாவின் அரசு தேவையான படுக்கை வசதிகள் தொடர்ந்து ஏற்படுத்தி தந்து வருகிறது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் தற்போது 600 படுக்கை வசதிகள் தயாராக உள்ளது. மேலும் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு முகாம்களில் 1,094 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 240 படுக்கைகளுக்கு ஆக்சிசன் பைப்லைன் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ஆக்சிசன்பைப்லைன்அமைத்திடபொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகம் முழுவதும் மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்திட ரூ.76 கோடி மதிப்பில் ஆக்சிசன் கருவிகள் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும், 
அலோபதி மருந்துகள் மட்டுமின்றி சித்தா, யோகா முறைகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 1,100 நபர்களுக்கு கொரோனா தொற்றுபரிசோதனைகள்செய்யப்படுகிறது.இதனைமேலும்அதிகரிக்கும்வகையிலும், கொரோனா தொற்று முடிவு விரைவில் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில்; தலா ரூ.17 லட்சம் மதிப்பில் 2 ஆர்டிபிசிஆர் கருவிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 3 ஆயிரம் நபர்களுக்கு மேல் பரிசோதனை மேற்கொள்ள  - முடியும். மேலும் மருத்துவ பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிந்துகொள்ள 
லேப்; டெக்னிசியன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள்உள்ளிட்டபணியாளர்களை நியமிக்கப்பட்டு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.                                                                                                                                                               இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுகிறது. மாண்புமிகு 
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசோதனைகள் இன்னும் அதிகரித்து நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கைகளை 
மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை 
அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 
பிளாஸ்மா சிகிச்சை இதுவரை 26 பேருக்கு அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமாகி சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பூரணம் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்த மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். எனவே குணமானவர்கள் அதிக அளவில் மனமுவந்து பிளாஸ்மா தானம் அளிக்க 
முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 109 மையங்களில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தபடி பொதுமக்கள் அவசிய வேலைக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளிவர வேண்டும்எனதெரிவித்தார்கள்.பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளிவரும்போது முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், தமிழக அரசு மேற்கொள்ளும் 
கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.                                                                                                                    
அதனைத்தொடர்ந்து மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் 
சி.விஜயபாஸ்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் ஆகியோர், டூவிபுரம் இரண்டாவது தெரு நோய் கட்டுபாட்டு பகுதியில்மாநகராட்சிமூலம்மேற்கொள்ளப்பட்டுவரும்கொரோனாதடுப்புபணிகளையும், நடமாடும் மாதிரி சேகரிப்பு மையம் மூலம் சளி மாதிரிகள் சேகரிக்கும்பணிகளைஆய்வுசெய்தார்கள். மேலும், வீடு வீடாக சென்று பல்சஸ் பரிசோதனை செய்யும் பணிகளையும், தமிழக அரசு மூலம் வடிவமைக்கப்பட்ட கொரோனா தொற்று விழிப்புணர்வு மடிப்பேடுகளை பொதுமக்களுக்கு வழங்கி, முககவசங்களை அணிந்து அவசிய வேலைக்கு - மட்டுமே வெளிவர வேண்டும் என தெரிவித்தார்கள்.டூவிபுரம் பகுதி பொதுமக்கள் தமிழக அரசு எங்களுக்கு சிறப்பான முறையில் பரிசோதனைகளை மேற்கொண்டு 
எங்களுக்கு சிறப்பான சிசிச்சைகளை அளித்து வருவதற்கு தமிழக அரசுக்கு 
தெரிவித்தார்கள்.                                                     
 அதனைத்தொடர்ந்து மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் 
சி.விஜயபாஸ்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் ஆகியோர், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கொரோனா தொற்று பரிசோதனை 2 ஆர்டிபிசிஆர் கருவிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார், இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் திரு.வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதிபாலன், இணை இயக்குநர் மருத்துவ நல பணிகள் (பொ) மரு.பொன் இசக்கி, மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.அருண்குமார், உதவி ஆணையர் 
திரு.சரவணன், உறைவிட மருத்துவர் மரு.சைலேஸ் ஜெபமணி, துணை 
இயக்குநர்கள் சுகாதார பணிகள் மரு.கிருஷ்ணலிலா, மரு.அனிதா, 
பொதுப்பணித்துறைஉதவிசெயற்பொறியாளர்கள்(மருத்துவம்)திரு.வெள்ளைசாமி, திரு.ராமலிங்கம் (மின்சார பிரிவு), உதவி பொறியாளர் திரு.அன்புராஜ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.மாரியப்பன், முக்கிய 
பிரமுகர் திரு.ஆறுமுகநயினார் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் 
கலந்துகொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...