முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு


இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் காரணங்கள் கேட்டறிந்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, கபசுரக்குடிநீர் வழங்கினார்.   

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். திரு. ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். 

 அந்த ஆய்வின்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் யாரும் தேவையில்லாமல் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நாம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எளிதில் விடுபடலாம் எனவும் தெரிவித்தார். 

மேலும் தேவையில்லாமல் ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 7782க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3484 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில், கடந்த  வாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும்,  

 தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் சுமார் 26 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார். 

இன்று வெளியே வந்தவர்களை நிறுத்தி, அவர்கள் வெளியே வந்ததற்கான காரணங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு கொரோனா ரைவரஸ் தாக்கம் பற்றியும், அதனை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுரக்குடிநீர் வழங்கினார். 

தூத்துக்குடி  காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், காவல்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அம்பிகா, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. வனிதா, உதவி ஆய்வாளர்கள் திரு. வெங்கடேஷ், சங்கர், செந்தில்குமார் உட்பட பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...