முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு வங்கியின் விவசாய உள்கட்டமைப்பு நிதி தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் : தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு . ஆட்சியர் தகவல்

 



------------------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  நபார்டு வங்கியின் விவசாய உள்கட்டமைப்பு நிதி தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு  கூட்டம் இன்று (03.09.2020) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:

 மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின்  அறிவிப்பிற்கினங்க மத்திய நிதி அமைச்சர் அவர்களால் ரூ.1இலட்சம் கோடி மதிப்பில் இந்திய அளவில் விவசாய உள்கட்டமைப்பு மேம்படுத்த நிதி நிர்ணயிக்கப்பட்டு, அதில் தமிழகத்திற்க்கு இத்திட்டதில் ரூ.5990 கோடி நிதி இலக்கு நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபடவுள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் கடன் நிதியை பெறுவதற்கு விவசாய கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், விவசாய கூட்டுறவு உற்பத்தி குழுக்கள், சுயஉதவி குழுக்கள்  போன்றவை தகுதியுவையாகும். 

இத்திட்டன் கீழ் கடனுதவி பெற  தகுதியான திட்டங்களாவது (தொழில்கள்), விவசாய பொருட்கள் விற்பனை தொடர்பான மின்னனு வர்த்தகங்கள் (நு-அயசமநவiபெ pடயவகழசஅ), சேமிப்பு கிடங்குகள், பழங்களை பதப்படுத்தி வைக்கும் கிடங்குகள், போக்குவரத்து தடவாளங்கள், குளிர் பாதன கிடங்குகள்,  இயற்க்கை விவசாயத்திறக்கு தேவையான இடு பொருட்கள் உற்பத்தி செய்தல், நுண்நூட்ட உயிரி உரங்கள் தயாரித்தல்,   உள்ளிட்டவை வேளாண்மை தொடர்பான திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ்  ரூ.2கோடி வரையிலான கடன்களுக்கு 3சதவீதம் வரை வட்டி சலுகையுடன் 7ஆண்டு கால அளவில் வழங்கப்படும் எனவும்,  மேலும் இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை hவவிள:ஃஃயபசiiகெசய.னயஉ.பழஎ.in  என்ற இணையதள முகவரியில் பெறலாம். இத்திட்டத்தினை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதரத்தை, பொருளாதாரத்தை உயர்த்திட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என பேசினார். 

இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு. ரவிசந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேளாண்மை இயக்குநர் திருமதி. ரமணிதேவி,  நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் திரு. சுரேஷ் ராமலிங்கம், முன்னோடி வங்கி மேளாலர் திரு. யோகானந், மாவட்ட தொழில் மைய திரு. கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் திரு. மொகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு. பாலசுப்பிரமணி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அலுவலர்கள் உள்ளனர்.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்