முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூரில்; புதிய. போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையம் திறப்பு

திருச்செந்தூரில்; புதிய. போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையம் திறப்பு      




தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில்; புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையத்தை இன்று   மாவட்ட   காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


இன்று (14.10.2020) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்செந்தூர் மெயின் ஆர்ச் அருகே திருச்செந்தூர் போக்குவரத்து துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்தார். 


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், மக்களுக்கு சேவை செய்வதே காவல்துறையின் நோக்கமாகும். மேலும் தூத்துக்குடியின் முக்கிய நகரமான திருச்செந்தூர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும்  மக்கள் அடிக்கடி அதிகம் கூடுமிடமாகும். அதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடமாக திருச்செந்தூர் உள்ளது. இவ்வாறு அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு இப்புறக்காவல் நிலையம் போக்குவரத்து காவல்துறை முயற்சியால் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்புறக்காவல் நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்படும் என்றும், கொரோன தொற்று நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பதற்கு முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கைகளை அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசிகொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார். பின் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரகுடீநீர் மற்றும் முகக் கவசம் வழங்கினார்.  


இந்நிகழ்வின் போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப, திருச்செந்துர் கோவில் காவல் நிலைய  ஆய்வாளர் திரு. ஞானசேகரன், திருச்செந்தூர்; காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், திருச்செந்தூர் வியாபாரிகள் சங்க தலைவர்கள் திரு. கணேசன். திரு. காமராஜ், திரு. பெரியசாமி மற்றும்; பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...