முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்

 

திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்

 



தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்; தலைமையில் நடைபெற்றது. 

  (15.10.2020) மாலை திருச்செந்தூர் செல்வம் மஹாலில் போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்கக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது, நமது உடம்புக்கு தண்டுவடம் எப்படி முக்கியமானதாக உள்ளதோ,  அதேபோன்று ஒரு நகரம் அல்லது கிராமத்தின் தண்டுவடம் வியாபாரிகள் ஆகும், ஒரு நகரம் எப்படிப்பட்ட நகரமாக இருக்க வேண்டும் அல்லது இருக்கின்றது என்பதை காட்டுவதில் முக்கியபங்கு அங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் தான். போக்குவரத்திலிருந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரை நமக்கு முறையாக தகவல் சொல்லி ஒத்துழைப்பு கொடுப்பவர்களும் வியாபாரிகள் தான். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் காவல்துறைக்கும் ஒரு நல்ல இனக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகதான் ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்; நடத்தி வருகிறோம். வியாபாரிகள் காவல்துறையினரோடு ஒரு இனக்கமான சூழ்நிலையில் இருக்க விரும்புவார்கள், ஏனென்றால் மேற்சொன்னவாறு ஒரு நகரம் மேன்மையடைய வேண்டும் என்றால் வியாபாரிகள் மிக முக்கியம், அதனால் காவல்துறையினரும் ஒரு ஒத்துழைப்போடு ஒரு நல்ல எண்ணத்தோடு வியாபாரிகளிடம் பழக விரும்புகிறார்கள். எல்லா இடங்களிலும் காவல்துறையினர் - வியாபாரிகள் கலந்துரையாடல் நிகழ்சி மூலம் நல்ல புரிதல் ஏற்படும். அந்த புரிதலின் மூலம் நிறை குறைகள் தெரிய வரும். காவல்துறையினரிடம் குறைகள் இருப்பின் அதை நாமும் திருத்திக் கொள்ளலாம், வியாபாரிகளிடம் எதும் குறை இருந்தால் அதையும் சொல்லி திருத்திக் கொள்ளலாம். அதே போன்று சிசிடிவி கேமிராவை பொருத்துவது மிக முக்கியமான ஒன்று. சிசிடிவி கேமிரா காலத்தின் கட்டாயம், சிசிடிவி கேமிரா பொருத்துவதன் மூலம் ஒரு நிகழ்வு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு எளிய சாதனம்தான் சிசிடிவி கேமிரா, இன்றைக்கு காவல்துறையில் 90 சதவீதம் குற்றங்களில் சிசிடிவி கேமிரா மூலமாக உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடிகிறது. அதனால் வீட்டிற்கு வெளியே ரோடு, கடைவீதி, பேருந்து நிலையம், தெருக்கள் சந்திப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமிரா அமைப்பதற்கு நீங்கள் முன்வந்து உங்கள் ஊரை குற்றமில்லா பகுதியாக மாற்றி காவல்துறைக்கு நல்ல ஒத்துழைப்பை தர வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசினார்கள்.

இக்கூட்டத்தில் திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் திரு. துரைசிங், நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் திரு. காமராஜ், யாதவர் வியாபாரிகள் சங்க தலைவர் திரு. பெரியசாமி, கோவில் வியாபாரிகள் சங்க தலைவர் திரு. பொன்ராஜ் உள்ளிட்ட வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வின் போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞான சேகரன், தாலுகா காவல் நிலைய ஆய்வளார் திரு. முத்துராமன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்