முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணி

     



தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (17.10.2020) பக்தர்கள் இன்றி பொதுமக்கள் ஒத்துழைப்போடு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 


    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இரண்டு கூடுதல் கண்காணிப்பாளரகள், நான்கு துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினமும் 250 போலீசார் வீதம் 2 பிரிவாக (ளாகைவ) ஆக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்தும் பொருட்டு முதல் நாள் மற்றும் பத்தாம் நாள் திருவிழாவிற்கு பொதுமக்கள், பக்தர்கள் யாரும் வரவேண்டாம், இரண்டாவது நாள் முதல் முன்பதிவு செய்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 8000 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.  மாவட்டத்தில் 1300 தசரா குழுக்கள் உள்ளது, நாளை (18.10.2020) முதல் முன்பதிவு செய்த குழுக்கள், ஒரு குழுவிற்கு இரண்டு பேர் மட்டும் கோவில் அலுவலகத்தில் வந்து காப்பு கயிறை பெற்றுக் கொண்டு, தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பு மற்றும் வேடம் அணிந்து திருவிழா இறுதி நாளன்று பக்தர்கள், தங்கள் ஊரில் தங்கள் பகுதிகளிலேயே காப்பை கழட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


இன்று பக்தர்கள் முதல் நாள் திருவிழாவிற்கு வராமல் ஒத்துழைப்பு கொடுத்தது போல பத்தாம் நாள் திருவிழாவிற்கும் யாரும் வராமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  பக்தர்கள், அவரவர்  ஊரிலேயே பிரார்தனையை முடித்துக் கொள்றுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 


     இந்நிகழவின் போது மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...