முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 


தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலை நாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------



   தூத்துக்குடி மாவட்டத்தில் 30.11.2020 முதல் அரசு வேலை நாட்களில் உள்ள ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்து ஒப்புகை சீட்டு பெறுவதோடு காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும் குறைகளை காணொளி காட்சி வாயிலாக தெரிவிக்கவரும் பொதுமக்கள் அனைவரும் தாலுக்கா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினி (ர்யனெ ளயnவைணைநச) ஆகியவை கடைபிடிக்க வேண்டும்.


                    

  


      மேற்கண்ட நேரங்களில், பொதுமக்கள் மனு கொண்டுவந்து காணொளி வாயிலாக நேரடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

.   



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...