முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை



தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் இன்று (03.12.2020) மாலை  6 மணி முதல் வீச உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்


-----------------------------------------------------------------------------------------------------------


தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல்; இன்று மாலை வீச உள்ளது எனவும், இந்த சமயத்தில் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மிக அவசிய தேவையன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் கன மழையின் காரணமாக நீர் நிலைகளில் அதிக வெள்ளம் செல்ல வாய்ப்புள்ளது எனவே நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். புயலின் காரணமாக கடல் கொந்தளிப்பு வாய்ப்புள்ளதால் கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம். கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், மின்கம்பங்கள்; மின்கம்பிகள், தெருவிளக்குகள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் எனவும், காற்று பலமாக வீசுவதால் மரங்கள் விழ வாய்ப்புள்ளது எனவே பொதுமக்கள் மரங்களுக்கு கீழ் எக்காரணம் கொண்டும் ஒதுங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் கிராமப்புற பகுதியில் அமைக்கபட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடைமைகளை பத்திரப்படுத்திக்கொள்ளுமாறும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கால்நடைகள் வளர்போர் தங்களது கால்நடைகளை பாதிப்பு ஏற்படாத பகுதிக்கு கொண்டு செல்லுமாறும், மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் டார்ச்லைட், மெழுவத்தி, தீப்பெட்டி போன்றவைகளை இருப்பில் வைத்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


இன்று (03.12.2020) மாலை  6 மணி முதல் பொதுமக்கள் மிக முக்கிய காரணம் எதுவுமின்றி வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் எனவும், வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதிகாரப்பூர்வ மற்றும் நம்பதகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் பார்க்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் அவசரகால கட்டுபாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 0461 2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், 9486454714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புயல் பாதிப்பு தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்து உதவுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...