கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

  கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்





32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

 

இந்த மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கடந்த 18.01.2021 முதல் தினம் தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 



இன்று தூத்துக்குடி காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பேராசிரியர் திரு. சங்கர் அவர்கள் தலைமையிலான சஹா கிராமியக் குழுவினர்  பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலிருந்து குரூஸ்பர்னாந்து சிலை வரை நடத்திச் சென்று அங்கும் ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தி நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் வாகன ஓட்டிகளுக்கு சாலைபாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்;. 



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி போக்குவரத்துப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. விநாயகம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. நெடுஞ்செழிபாண்டியன் மற்றும் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. நாகூர்கனி ஆகியோர் செய்திருந்தனர். 


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வளார் திரு. ஜெயப்பிரகாஷ், உதவி ஆய்வாளர்கள் திரு. ரவிக்குமார், வேல்ராஜ், திரு. வெங்கடேசன் உட்பட காவல்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்