முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் குடியரசு தின விழா

 



தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா

-----------------------------------------------------------------------------------------------------------------


தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (26.01.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார். 



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காவல்துறை 79 நபர்களுக்கு மெடல், 17 நபர்களுக்கு சான்றிதழ், கொடிநாள் நிதி வசூல் செய்தவர்களுக்கும், முன்னாள் படைவீரர் நலன், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மின்சார வாரியம், சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 353 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். 

தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் போகி பண்டியை அன்று நடத்தப்பட்ட தூய்மையான தூத்துக்குடி சமத்துவ பொங்கல் (13.1.2021) என்ற நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழு, அரசு அலுவலர்கள்  ஆகியவர்களுக்கு அவரது பணியை பாராட்டும் பொருட்டு 2021ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சிறந்த நகராட்சி கோவில்பட்டி, சிறந்த அலுவலகம் கோவில்பட்டி வட்டார போக்குரத்து அலுவலகம், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம், சிறப்பாக பணிபுரிந்தவர் செய்தி மக்கள்தொடர்பு அலுவலர், சிறந்த தாலுகா உதவி இயக்குநர் (பேருராட்சிகள்), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாசில்தார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவைகுண்டம் தாலுகா, சிறந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புதூர் ஊராட்சி ஒன்றியம், விளாத்திகுளம், சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் நட்டாதி திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், வாதலரக்கரை ஊராட்சி புதூர் ஊராட்சி ஒன்றியம், சிறந்த தெரு வார்டு உறுப்பினர் அடைக்கலாபுரம் தெரு ஸ்ரீமூலக்கரை ஊராட்சி, சிறந்த மகளிர் குழு சிறந்த கல்லூரி நிலா சுய உதவி குழு குமாரகிரி, விரிவுரையாளர் என்எஸ்எஸ் காமராஜ் கல்லூரி, விரிவுரையாளர் என்எஸ்எஸ் நாசரேத் மர்காசிஷ் கல்லூரி, தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. 


மேலும், கூட்டுறவுத்துறையின் மூலம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கடன் 1 பயனாளிக்கு ரூ.80.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்;, வேளாண்மைத்துறை மூலம் தேசிய பாதுகாப்பு இயக்கம் (பயறு) 9 விவசாயிகளுக்கு ரூ.74,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,  மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோர் திட்டம் மானிய கடன் 13 பயனாளிகளுக்கு ரூ.21,29,968 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,  மகளிர் திட்டம் மூலம்  வங்கி பெருங்கடன் மற்றும் அம்மா இருசக்கர வாகனம் 4 பயனாளிகளுக்கு ரூ.25.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விபத்து நிவாரணம்ஃ கல்வி உதவித்தொகை மாதாந்திர உதவித்தொகை 34 பயனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.61,955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் சிறப்பு நிதி உதவி மற்றும் தொழில் கடன் 34 நபர்களுக்கு ரூ.38 லட்சம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தேய்பு பெட்டி 10 நபர்களுக்கு ரூ.52,410 என மொத்தம்  106  பயனாளிகளுக்கு ரூ.1,69,34,553  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


கொரோனா தொற்று காரணமாக அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மூலம் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப.,  மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெயசீலன், இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் கலோன், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திருமதி.ரேவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.ஜஸ்டின், ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.பரிமளா, வேளாண்மை இயக்குநர் திரு.முகைதீன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சங்கரநாராயணன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.மாரியப்பன்,  மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்