மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்



-------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று (11.03.2021) நடைபெற்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கும்போது நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. நமது மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 1603 வாக்குசாவடிகள் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க சொன்னதன் அடிப்படையில் 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். நமது வாக்கு, நமது உரிமை. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் எவ்வித சிரமம் இன்றி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தபால் வாக்கு மூலம் வாக்களித்திட விரும்பிடும் மாற்றுத்திறனாளிகள் படிவம் -12னு ல் உள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து தங்களது செல்பேசி எண்ணையும் குறிப்பிட்டு 12.03.2021 முதல் 16.03.2021 5 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (டீடுழு) ஒப்படைத்திட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் -12னு-ஐ அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக் கொள்வார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செல்லும்போது வாக்காளர்கள் இல்லையெனில் 5 நாட்களுக்குள் மீண்டும் மறு முறை சென்று படிவம் பெற்றுக்கொள்வார்;. தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுதாக்கல் கடைசி நாளன்று (19.03.2021) படிவம் 12னு-ல் உள்ள விவரங்களை சரிபார்த்து வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்தும், தகுதியான நபர்களுக்கு அவரால் நியமனம் செய்யப்படும் குழு மூலம் தபால் வாக்கு வழங்குவார். 

வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பது குறித்தும். வாக்குசாவடி மையங்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பது குறித்தும் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் Pறுனு யுPP -ஐ பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த தகவல்களை தங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கும்போது நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 

கொரோனா நோய் தொற்றின் காரணமாக வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான வாக்குசாவடிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் ரேம்ப் வசதி, லைட் வசதி, பேன் வசதி, கொரோனா கால கட்டமாக உள்ளதால் இரண்டு பக்கமும் காற்றோட்ட வசதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு சாணிடைசர், முகககவசம், வாக்களிக்கும்பொழுது கையுறைகள் வழங்கப்படும். வரும் 15.03.2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது என பேசினார். 

கூட்டத்தில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.சதீஸ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரமநாயகம், தென்மண்டல மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம், காதுகேளாதோர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்