முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு.

 


       



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமயில் நடைபெற்றது.


தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கும், அவற்றை அமல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200ஃ- அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 


அதன்படி இன்று (09.04.2021) தூத்துக்குடி காவல்துறை சார்பாக குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், பரவாமல் தடுப்பதற்கான அரசு விதித்துள்ள நெறிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்; கொரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு நாளை (10.04.2021) முதல் கல்யாண மண்டபங்கள், பொதுகூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. எனவே நாம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், வைரஸ் நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எடுத்துரைத்தார். பின் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் திரு. முருகபெருமாள், திரு. காமராஜ் திரு. வெங்கடேஷ் மற்றும் தனிப்பரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ், தலைமைக் காவலர் திரு. சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...