தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

 


தூத்துக்குடி மாவட்;டம்

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

ஊடக அறிவிக்கை (ஆநனயை டீரடடநவin)


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் இருவேளை கபசுர குடிநீர்  விநியோகமும், கிருமிநாசினி தெளிப்பும், தூய்மைபணிகளும்; மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின்  பரிந்துரைகளின்படி இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றாநோய் பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய மக்களை கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பு, பொதுமக்கள் முகக்கவசம் அணிதல்; வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத மக்களுக்கு அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் போதுவீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொது இடங்களில் மக்கள் தவறாது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும.; உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள்,     மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இ;டங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல்; கடைபிடிக்க வேண்டும். அப்படி பின்பற்றினால்தான் நோயினை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.  வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.கடைகளில் பொருட்களை வாங்குகின்ற போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். வெளியில் இருந்து வீட்டிற்குள் சென்ற உடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் வீட்டில் யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும.; தொழிற்சாலைகள், உணவுக் கூடங்கள், மார்க்கெட் போன்றவற்றின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பு ஊசிபோட ஏற்பாடு செய்யவேண்டும். இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள்; தயார் நிலையில் உள்ளது. கொரானோ-19 தீவிரதடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 13.04.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சியில் 9 இடங்களிலும், தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில்; 52 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 28 இடங்களிலும்; ஆக மொத்தம் 89 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக 14.04.2021 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்கண்டபடி காய்ச்சல் முகாம்கள் நடைபெறவுள்ளன.








தூத்துக்குடி மாநகராட்சி:


11.00 முதல் 1.00 வரை


2.00 முதல் 4.00வரை


சிதம்பரநகர்,

அம்மன் கோயில் தெரு,

லயன்ஸ் டவுன்;.


நேதாஜி நகர் 3-வது தெரு மெயின்,

மணல் தெரு,

நம்மாழ்வார் தெரு சபா அருகில்,

எட்டையபுரம் ஹவுஸிங் போர்டு,

பிள்ளையார் கோயில் அருகில்,

கிருபை நகர்.




தூத்துக்குடி சுகாதார மாவட்டம்:

சுகாதார

வட்டாரம்

9.00 முதல் 11.00 வரை

11.00 முதல் 1.00 வரை 

2.00 முதல் 4.00 வரை


புதுக்கோட்டை

எம் புதூர்,

முடிவைத்தானேந்தேல்,

அய்யனடைப்பு,

கோரம்பள்ளம்.

மறவன்மடம்,

எம்.ஜி.ஆர். நகர்,

தெற்குதெரு,

புதுக்கோட்டை

முடிவைத்தானேந்தேல்,

இந்திராநகர்,

புதுக்கோட்டை.


முதலூர்;

பூச்சிக்காடுவிலக்கு,

சிறப்பூர்.

பூச்சிக்காடு,

நரையன் குடியிருப்பு

எம்மாகிழவிவிளை,

பண்டாரபுரம்.


மெஞ்ஞானபுரம்

கல்விளை,

சீர்காட்சி.

செட்டியாபத்து,

உடன்குடி, கோட்டவிளை.

உதிரமாடன்குடியிருப்பு,

முத்துநகர்.


தென்திருப்பேரை

கீரனூர்

சேதுக்குவாய்த்தான் 

வகுத்தான் குப்பம்


வல்லநாடு

ராமானுஜம்புதூர்

வெட்டிகுளம்

மகிழ்ச்சிபுரம்


ஏரல்

பண்ணைவிளை,

பழையகாயல்.

கண்ணாடிவிளை,

ரட்;சண்யபுரம்.

கொம்புகாரன்பொட்டல்,

ராமசந்திராபுரம்.


காயாமொழி

எல்.எப். ரோடு,

காயல்பட்டிணம்,

வீரராகவபுரம், திருச்செந்தூர்.

கே.எம்.தெரு,

காயல்பட்டினம்,

தெப்பக்குளம்  தெரு,

திருச்செந்தூர்

தைக்காதெரு,

காயல்பட்டிணம்,

வேலுகந்தம்மன் கோயில் தெரு,

திருச்செந்தூர்


கருங்குளம்

சீத்தார்குளம்

காசிலிங்கபுரம்

கீழபுத்தனேரி


ஆழ்வார்திருநகரி

தென்திருப்பேரை

அழகப்பபுரம்

மணத்தி



கோவில்பட்டி சுகாதார மாவட்டம்:

சுகாதார வட்டாரம்

9.00 முதல் 11.00

11.00 முதல் 1.00

2.00 முதல் 4.00


கடம்பூர்

கோவிந்தம்பட்டி,

சிதம்பரம்பட்டி,

தெற்கு இளந்தகுளம்.

தீத்தாம்பட்டி,

ஆவுடையம்மாள்புரம்,

அகிலான்டபுரம்.

செவல்பட்டி,

செட்டிகுறிச்சி,

புதுக்கோட்டை.



பேரிலோவன்பட்டி

ஓ.துரைச்சாமிபுரம்,

கோடாங்கிப்பட்டி.

கந்தசாமிபுரம்,

மகாராஜபுரம்.

வேலிடுப்பட்டி,

கருத்தையாபுரம்.


புதூர்

சென்னமரெட்டிபட்டி,

எம்.துரைசாமிபுரம்,

கோட்டுர்.

சங்கரலிங்கபுரம், மாதலாபுரம்,

பொன்னையாபுரம்.

சின்னவநாயகன்பட்டி,

மேலநம்பிபுரம்,

குமாரலிங்கபுரம்.


ஓட்டநத்தம்

புதூர்  பாண்டியாபுரம்,

கீழமுடிமன்,

ஆதனூர்.

வாலசமுத்திரம்,

சில்லாங்குளம்,

காட்டுநாயக்கன்பட்டி.

பனையூர்,

மணியாச்சி,

மிளகுநத்தம்.


கீழஈரால்

குமரிகுளம்

விகாம்பட்டி

ஆத்திகிணறு


பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்