முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்ட

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

---------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.04.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இடத்திற்கு தகுந்தவாறு குறைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும்  முகவர்கள் அனைவரும் சுவுPஊசு டெஸ்டினை 28.04.21 மற்றும் 29.04.21 ஆகிய இரு தினங்களுக்குள் எடுத்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள் ஃ முகவர்கள் கண்டிப்பாக முககவசம், கையுறை,                 குயஉந ஷீல்ட் ஆகியவை அணிய வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும் முகவர்கள் அனைவருக்கும் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களால் சானிடைசர் வழங்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மேஜை அருகில் சமூக இடைவெளியினை கடைபிடித்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள் ஃ முகவர்கள் ஆகியோருக்கு காலை ஃ மதியம் ஃ இரவு உணவு சம்மந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து முன்பணம் பெற்று வழங்க வேண்டும்.

6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் அறைகளில் மிண்ணனு அஞ்சல் முறை மூலம் பெறப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிக்காக இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டு கணிணிஃமடிக்கணிணி வாயிலாக மாதிரி வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. வாக்கு எண்ணும் பணி முழுவதும் தலைமை தேர்தல் அலுவலர் அவர்கள் கண்காணித்திடும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாக்கு எண்ணும் அரங்கில் சிசிடிவி கேமிரா நிறுவிடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளின்போது வேட்பாளர்களின் முகவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, திருமதி.கீதாஜீவன், எம்.எல்.ஏ. (தி.மு.க.), திரு.சந்தானம், (அ.இ.அ.தி.மு.க.), திரு.சந்திரசேகர் (அ.இ.அ.தி.மு.க.), திரு.சாமுவேல்(சுயேட்சை), திரு.ராஜா (சி.பி.எம்), திரு.கிருபாகரன் (தி.மு.க.), சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் மரு.போஸ்கோராஜா(தூத்துக்குடி), மரு.அனிதா (கோவில்பட்டி), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் திரு.வெள்ளைச்சாமிராஜ்,  திரு.ராமலிங்கம், உதவி பொறியாளர் திரு.பாலா, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரகு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...