முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு.





கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்தி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு.


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (25.04.2021) நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதலில் இன்று (25.04.2021) தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பில்; தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.


அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தற்போது கொரோனா வைரஸ் 2வது கட்டமாக தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று (24.04.2021) இரவு 10.00 மணியிலிருந்து நாளை திங்கள்கிழமை (26.04.2021) காலை 04.00 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கபடுகிறது. ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்,  தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும்,


மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி நகரில் 30 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 130 இடங்களில் சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும்; முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும் என்றும், நாளை முதல் (26.04.2021) உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. இதுபோன்று தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட காவல்துறைக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கூறினார். பின் ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களுக்கு கபசுரகுடீநீர் வழங்கினார்.


 இந்நிகழ்வின்போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள்; திரு. ஆர்தர் ஜஸ்டின், திரு. ராமலிங்கம், போக்குவரத்து; பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்