முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருடு போன. இருசக்கர வாகனங்கள் - மடிக்கணினி - செல்போன்கள் மீட்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

 



தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 இடங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது - ரூபாய் 1.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்கள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.


         கடந்த சில நாட்களாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்; சில இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், தலைமை காவலர் திரு. பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மாணிக்கராஜ், தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், வடபாகம் காவல் நிலைய காவலர் திரு. மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.


       மேற்படி தனிப்படையினர் சம்பவ இடங்கள் மற்றும் அருகில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மீனவர் காலணியைச் சேர்ந்த லேயோன் மகன் மரியக்கண் ஜென்ஸ்டன் (20) மற்றும் 15, 16 வயது மதிக்கதக்க நான்கு இளஞ்சிறார்கள் ஆகியோர் சேர்ந்து தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 28.04.2021 அன்று அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு கோயில் முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 29.04.2021 அன்று தூத்துக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து ரூபாய் 10,000ஃ- பணம், தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 30.04.2021 அன்று கால்டுவெல் காலனி பகுதியில் வீடு புகுந்து 6 பவுன் தங்க நகை, மடிக்கணினி, செல்போன் மற்றும்; ரூபாய் 3,000ஃ-பணம், லயன்ஸ்டவுண் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் பணம் ரூபாய் 7,120ஃ-, இந்திரா நகர் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 01.05.2021 அன்று கால்டுவெல் காலனி பகுதியில் வீடு புகுந்து செல்போன் மற்றும் இந்திரா நகர் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது.


மேற்படி தனிப்படையினர் எதிரிகள் மரியக்கண் ஜென்ஸ்டன் மற்றும் நான்கு இளஞ்சிறார்களை கைது செய்து அவரகளிடமிருந்து மொத்தம் ரூபாய் 1.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்களை கைப்பற்றினர்.


பல பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட மேற்படி எதிரிகளை தீவிர விசாரணை மேற்கொண்டு விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...