முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழா சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு

.

 


தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கபசுரகுடிநீர் வழங்கினார். 


தூத்துக்குடி மாவட்டம் 3ம் மைல் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழா முன்னிட்டு இன்று (05.05.2021) தூத்துக்குடி 3ம் மைல் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு முகாம் 3ம் மைல் மெயின்ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி புதிய கட்டுபாடுகள் நாளை (06.05.2021) அதிகாலை 4 மணி முதல் 20.05.2021 அன்று அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தபட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருக்கும்.  மேலும்  பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறிகடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறிகடைகள்; திங்கள் முதல் சனி வரை மதியம் 12 மணி வரை மட்டும் குளிர்சாதன வசதியின்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமுதாய அரசியல், கல்வி, கலாச்சாரம் பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், மருத்துவ சேவைகள் போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை. ஹோட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. தேநீர் கடைகள் திங்கள் முதல் சனி வரை மட்டும் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும், அதுவும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கபடும். ஹோட்டல்களில் பார்சல் சேவைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் அனுமதி உண்டு. இறைச்சி மற்றும் மீன் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு.  தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்த நாளை முதல் மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.


   மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரைறயாற்றினார். பின் அனைவருக்கும்; கபசுரகுடிநீர் வழங்கினார். 

இந்த விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை 3ம் மைல் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க தலைவர் திரு. ஜெயபாலன், துணை தலைவர் திரு. பெத்துபாண்டியன், செயலாளர்கள் திரு. செல்லத்துரை, திரு. மோகன்ராம், பொருளாளர் திரு. பொன்னம்பலம் ஆகியோர் செய்திருந்தனர்.


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சஞ்சீவ்குமார், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்சுரேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. மாரிக்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...