முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்;டம் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

 



தூத்துக்குடி மாவட்;டம்

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்


தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் கூட்டரங்கில் இருந்து அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் திரு.குமார்ஜெயந்த், இ.ஆ.ப., அவர்கள் காணொலி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (06.05.2021) ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப. மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் திரு.குமார்ஜெயந்த், இ.ஆ.ப., அவர்களிடம் விரிவாக எடுத்துக்கூறினார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கண்காணிப்பது குறித்து விளக்கமாக எடுத்துக்கூறினார். பின்னர் அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் அவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்தும் அவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் குறித்தும், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அதிகரித்தல் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். முககவசம் அணியாதவர்கள்மீது அபராதம் உள்ளிட்ட  நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு.முருகவேல், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.அனிதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...