முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழன்டா கலைக்கூட.ம் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக. ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட எஸ்.பி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஈரால் பகுதியில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.



எட்டாயபுரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியான கீழ ஈரால், எப்போதும்வென்றான் தம்பாள்யூரணி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் சுமார் 80 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக கொரோன ஊரடங்கு கால நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


அதை மேற்படி கலைக்கூடம் சார்பாக இன்று (22.05.2021) காலை எட்டையாபுரம் கீழ ஈரால் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரிசிப்பை, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்.


அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தற்போது தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு நாளைக்கு சுமார் 35,000 பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். பலர் தினமும் உயிரிழக்கின்றனர். கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்காக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதை பின்பற்ற வேண்டியது நமது கடமை. ஆகவே நாம் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் இயக்குனர் திரு. ஜெகஜீவன், ஆலோசகர்கள், திரு. பிரம்மராஜ், திரு. கதிர்வேல், செயலாளர் திரு. திருமணிராஜா, துணைச் செயலாளர் திரு. மந்திரமூர்த்தி மற்றும் மாணவர் தலைவர் திரு. கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், எட்டையாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர் முகமது, உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...