பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர், வெள்ளகோவில், ஆறுமுகமங்கலம் பகுதியில் பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள்; நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

---------------------

 


         தூத்துக்குடி  மாவட்டம் மேலஆத்தூர், வெள்ளகோவில், ஆறுமுகமங்கலம் பகுதியில் பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள்; நேரில் பார்வையிட்டு இன்று (26.05.2021) ஆய்வு செய்தார். அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூர் பகுதி, வெள்ளகோவில் சுகந்தலை பகுதி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றின் காரணமாக ஒடிந்து சேதமடைந்த வாழைமரங்களை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள்; பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து ஏரல் வட்டம் ஆறுமகமங்கலம் பகுதியில் வாழைகள் முறிந்து விழுந்த பகுதிகளை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு விதிமுறைகளின்படி இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறினார்.

பின்னர் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள்; செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

நேற்றைய தினம் வீசிய சூறாவளிக் காற்றால் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுகா பகுதியில்  வாழைகள் முறிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் தகவலின் அடிப்படையில் நேரில் வந்து பார்வையிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளோம். உடனடியாக சேதங்கள் குறித்து வேளாண்மை துறை, வருவாய் துறை இணைந்து ஆய்வு மேற்கொண்டு சேதம் மதிப்பீடு செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆத்தூரில் இருந்து தெற்கு ஆத்தூர் வரும் வழியில் வயதான பனைமரங்கள் மிகவும் பலவினமாக உள்ளது. அங்கு உயர் மின் அழுத்த மின் பாதை உள்ளது. பனைமரங்கள் அதன்மீது முறிந்து விழும்போது மிகப்பெரிய உயிர்சேதங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே ஆய்வு மேற்கொண்டு பலவினமான பனைமரங்களை கண்டறிந்து அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாழை சேதங்கள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விவசாய பெருமக்களை காக்கும் வகையில் என்ன விதிமுறைகள் உள்ளதோ அதன்படி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

      ஆய்வின்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, வட்டாட்சியர்கள் திரு.இசக்கிராஜா (ஏரல்), திரு.ராமச்சந்திரன் (திருச்செந்தூர்), முக்கிய பிரமுகர்கள் திரு.உமரிசங்கர், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.நவீன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




.

கருத்துகள்