முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

 


தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத் பேரூராட்சி, குரங்கணி  ஆகிய பகுதிகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

------------------------------

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத் பேரூராட்சி, குரங்கணி  ஆகிய பகுதிகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்  (31.05.2021)  அன்று நடைபெற்றது. இம்முகாமில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ்சிங், இ.கா.ப., மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரோனா தொற்று நோயை தமிழகத்தில் முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தினமும் சுமார் 9500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை 10000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அதிகப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் தற்போது 26 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி நம்முடைய உயிரை காக்கக்கூடியது.  


பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பரவலை தடுத்திட வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் எவ்வித அச்சமும் இன்றி கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசின் ஊரடங்கு விதியை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், காயாமொழி குளத்தினை பார்வையிட்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,  குளத்தினை தூர்வாறி ஆழப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் திரு.உமரிசங்கர், திரு.ராமஜெயம், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.எ.பி.ரமேஷ், திரு.கல்யாணசுந்தரம், திரு.அருணாசலம், திரு.பாலசிங், திரு.நவீன்குமார், திரு.செல்வகுமார், திரு.ராஜசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, வட்டாட்சியர்கள் திரு.முருகேசன் (திருச்செந்தூர்), திரு.இசக்கிராஜ் (ஏரல்), வட்டார மருத்துவ அலுவலர் திரு.பார்திபன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள்; கலந்துகொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...