முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்





தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி  வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் சீர்காட்சி கிராமத்தில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.  

-----------------------------





தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சியும், உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் சீர்காட்சி பகுதியில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (20.06.2021) நடைபெற்றது.                                                                                                                                                                                               இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு, கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்;கொண்டார்.                                                            


           

                                                                                                                                             மேலும் உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் ரூ.12 லட்சம் மதிப்பில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகளையும், சீர்காட்சி பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகளை துவக்கி வைத்தார். 


பின்னர் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய் தொற்றினை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் நோய் தொற்றினை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நமது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா நோயில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கிராம பகுதிகளில் மிகவும் அச்சப்பட்டார்கள். இன்று அந்த நிலை மாற்றப்பட்டு கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் நமக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நமது தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்ககொள்ள ஆர்வமாக பொதுமக்கள் முன்வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி நமது மாவட்டத்திற்கு தேவையானது தினசரி சென்னையில் இருந்து பெறப்படுகிறது. தடுப்பூசிகள் வரவர பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி நமக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்று மாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். கொரோனா மூன்றாவது அலை மட்டுமின்றி எந்த ஒரு நோயாக இருந்தாலும் பொதுமக்களை காக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ துறையில் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். எனவே எந்த அலை வந்தாலும் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா தடுப்பூசியினை அனைவரும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப.,  தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோராஜா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திரு.ராமச்சந்திரன்,  உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.நாகராஜன், திரு.பொற்செழியன், உதவி பொறியாளர் திரு.கார்த்திகேயன், முக்கிய பிரமுகர்கள் திரு.செங்குளி ரமேஷ், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.ராமஜெயம், திரு.சுதாகர், திரு.பாலசிங், திரு.வால்சுடலை, திரு.அனஸ், பஞ்சாயத்து தலைவர்கள் திரு.ராஜரத்தினம், திரு.செந்தில் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்