முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வு.



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

----------------------------

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று (07.07.2021) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்பேசியதாவது:

         



                                                           திருச்செந்தூர் பேரூராட்சிக்கென குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் தனி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 2.10 எம்எல்டி நீர் திருச்செந்தூருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக இப்பகுதியில் இருந்து 3 எம்எல்டி குடிநீர் எடுக்கும் வகையில் புதிய குடிநீர் திட்ட வரைவு ஒன்று தயார் செய்ய வேண்டும்.                                                                                                                                                                    மேலும் திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 11000 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 7000; குடியிருப்புகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருச்செந்தூரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூர் பகுதியில் பெறப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்ல 10 வாகனங்கள் வாங்கிட கருத்துருக்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியை தூய்மையாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் திருச்செந்தூர் பேரூராட்சியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திட்ட வரைவுகளை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் திரு.சேதுராமன், செயற்பொறியாளர் திருமதி.ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொறியாளர் திரு.வாசுதேவன், ஏரல் வட்டாட்சியர் திரு.இசக்கிராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் திருச்செந்தூர் திரு.ஆனந்தன், ஏரல் திரு.முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...