முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உணவு வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொராணா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 .



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொராணா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு

------------------------

 கொராணா என்ற வைரஸ் நோய் உலகளாவிய கொள்ளை நோயாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டு, அதன் தடுப்பு நடவடிக்கைகளை அரசு சீறிய முறையில் எடுத்துவருகினற்து. தற்பொழுது கொராணா நோய் தடுப்பின் ஒரு அங்கமாக 18 வயதினருக்கு மேற்பட்டோருக்கு அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இத்தடுப்பூசியை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள இம்மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. தற்பொழுது ஊரடங்கு தளரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக வணிக மையங்களுக்கு வந்நவண்ணம் உள்ளனர்.                                                                                                                                                                                               . தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள்,    விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் டீக்கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள் உள்ளிட்ட உணவு வணிகர்களில், 2177 வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமும், 15351 வணிகர்கள் உணவு பாதுகாப்புச் சான்றிதழும் பெற்றுள்ளனர். அறிகுறியில்லாமலோ அல்லது அறிகுறியுடன் உள்ள நோய்த்தொற்று உள்ளோரிடமிருந்து கொராணா மீண்டும் பொதுமக்களுக்கு பரவுவதை தடுப்பதற்காகவும், நலமுடன் உள்ளோர் கொராணய பாதிப்பிற்குள்ளாகாமல் தடுக்கவும், உணவு வணிக நிறுவன உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் கொராணா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு பணியும் இம்மாவட்டத்தில்  நடைபெற்றுவருகின்றது. இருப்பினும், அவ்வணிக நிறுவன உரிமையாளர்களும் பணியாளர்களும் கொராணா நோய் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுவதில் தொய்வு காணப்படுகின்றது. 

எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) ஒழுங்குமுறைகள் 2011-ன் பட்டியல்-4, பகுதி-2-ன் விதி 10.1(4)-ல் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து உணவு வணிக நிறுவன உரிமையாளர்களும் பணியாளர்களும் கொள்ளை நோயான கொராணா நோய்க்கு எதிராக அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, நோய் பரவுதலைக் கட்டுப்படுத்திட உதவுமாறு அறிவிக்கப்படுகின்றது. தவறும்பட்சத்தில் உணவு வணிக நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. தடுப்பூசிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்