முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி துவக்கி வைப்பு : மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு .



தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

-------------------------

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் தொழில் நிறுவனத்தின் மூலம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (03.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்.                                                                                                                                                                                                              


தொடர்ந்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு பேருந்து நிலையம் அருகில் பொது கழிப்பறை கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். 

               .                              


அதனைத்தொடர்ந்து எட்டயபுரம் வட்டம் கன்னகட்டை ஊராட்சி வெ.தளவாய்புரத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னகட்டை ஊராட்சியில் மக்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வெளியிடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தார். 

                                                                                                                                                       



தொடர்ந்து, திருச்செந்தூர் வட்டம் உடன்குடி மற்றும் அடைக்கலாபுரத்தில் கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டின் தரத்தினை ஆய்வு செய்தார். அப்போது, கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து தரப்படும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), செல்வி.கோகிலா (திருச்செந்தூர்), மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.மாரியப்பன்,  வட்டாட்சியர்கள் திரு.ஜஸ்டின் (தூத்துக்குடி), திரு.கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.முருகேசன் (திருச்செந்தூர்), திரு.அய்யப்பன் (எட்டயபுரம்), கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.அனிதா, உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.சக்திமுருகன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.பாக்கியலீலா, திருமதி.செல்வி, கருங்குளம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கோமதிராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜ்குமார், வட்டார மருத்துவ அலுவலர்(பொறுப்பு) மரு.அருண்விஸ்வநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.பானு, கன்னகட்டை ஊராட்சி மன்ற தலைவர் திரு.சீனிவாசன், வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் இயக்குநர் திரு.முரளிகணேசன், மிர்ச்சல் மோதா சேர்மன் சி.ஐ.ஐ. தூத்துக்குடி, மேலாண்மை இயக்குநர் சகாய மாதா சால்டர்ன்;ஸ், சகாயராஜ் இன்டஸ்ரீஸ் இயக்குநர் திரு.சகாய்  மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...