தமிழ் வளர்ச்சித் துறையில் ரூ.10000- பரிசுத்தொகை

    


 தமிழ் வளர்ச்சித் துறையில் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும்; ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.10000- பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறிக் குழு உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவர். மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பதோடு குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. 


விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ்வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவத்தினை நிறைவு செய்து, தாங்கள் பயிலும் பள்ளி ,  கல்லூரியிலிருந்து உரிய அனுமதிச் சான்றிதழ் பெற்று, 3 புகைப்படங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 20.12.2021க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்