முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

200 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு -. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

 


23.12.2021.

தூத்துக்குடிவட்டத்தில் கொலைமுயற்சி, போக்சோ மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 200 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை. 



கடந்த 28.10.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜா (எ) புஷ்பராஜ் (32), த/பெ. ராமராஜ், வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்வர்களான 1) சின்னராசு (32), தஃபெ. முத்துபாண்டி, 2) சக்திமணி (22), தஃபெ. கணேசன், 3) முத்துபாண்டி (27), தஃபெ. கருத்தப்பாண்டி, 4) கார்த்திக் (எ) அட்ட கார்த்திக், 5) பொன்னுதுரை (27), தஃபெ. செண்பகவேல், மற்றும் 6) சரவணன், (34), தஃபெ. கனி ஆகிய 6 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 


மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான சக்திமணி மற்றும் பொன்னுதுரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி அவர்களும்



, கடந்த 03.12.2021 அன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் மதியழகன் (29) தஃபெ. பன்னீர்செல்வம், செந்தட்டியாபுரம் புதூர், சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம் என்பவரை எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி மதியழகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி அவர்களும், 



ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் மகாராஜன் (37) தஃபெ. சோமு, தெற்கு வாழவல்லான், ஏரல் என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி மகாராஜன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமி பிரபா அவர்களும்,


 
கடந்த04.10.2021 அன்று ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்பலபாத் பகுதியில் காரில் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா கடத்திய வழக்கில் 1)மாரிமுத்து, தஃபெ. அய்யனார்துரை, ஆழ்வார்திருநகரி, 2) சங்கரன் (எ) சங்கரசுப்பு (26), தஃபெ. மந்திரமூர்த்தி, கீழகோட்டை வாசல் தெரு, ஸ்ரீவைகுண்டம், 3) பாலமுருகன் (25), தஃபெ. ராஜா (எ) ராசையா, வெள்;ர், ஸ்ரீவைகுண்டம், 4) ராமசாமி (26), தஃபெ. மாரிமுத்து, கீழகோட்டை வாசல் தெரு, ஸ்ரீவைகுண்டம் மற்றும்; 5) நம்பிகணேஷ் (27), தஃபெ. பரமசிவம், கீழகோட்டை வாசல் தெரு, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 பேரை ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கின் முக்கிய எதிரியான பாலமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் அவர்களும் 



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்வர்களான 1) சக்திமணி, தஃபெ. கணேசன், 2) பொன்னுதுரை, தஃபெ. செண்பகவேல், 3) மதியழகன், தஃபெ. பன்னீர்செல்வம், செந்தட்டியாபுரம் புதூர், சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம், 4) மகாராஜன், தஃபெ. சோமு, தெற்கு வாழவல்லான், ஏரல் மற்றும் 5) பாலமுருகன், தஃபெ. ராஜா (எ) ராசையா, வெள்;ர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


 இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 28 பேர் மற்றும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் 23 பேர் உட்பட 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பாக பணியாற்றி முழு ஒத்துழைப்பு கொடுத்து வரும் காவல்துறையினர் அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...