முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக, ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடிவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் அன்று (08.01.2022) ஒமைக்ரான்; கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் மேலும் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. இந்த பாலியல் குற்றங்கள் குறித்து பெண்களுக்கு கண்டிப்பான விழிப்புணர்வு தேவை. பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்கையில் நமக்கே தெரியாமல் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. 

ஆகவே மாணவிகளாகிய நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098, 181, மற்றும் 14417 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி ஒன்று தான் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். நீங்கள் கல்வியை நல்ல முறையில் பயின்று வருங்காலத்தில் சமுதாயத்தில் சிறந்த சாதனையளர்களாக திகழ வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி தனது சிறப்புரையை நிறைவு செய்தார். 



பின்னர் அப்பள்ளியிலுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில், எட்டையாபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் போலீசார் செய்திருந்தனர். 

இந்நிகழ்ச்சியில்மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமையாசிரியர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர் அவ்வை, மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி, உதவி ஆய்வாளர் முத்துமாரி, எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பொன்ராஜ், முருகன், பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...