குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்





தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.

 ---------------------- 

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில் இன்று (24.01.2022) நடைபெற்றது. 

 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 26.01.2022 அன்று தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாநகராட்சியின் சார்பில் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும். 

அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழு மற்றும் 108 அவசர ஊர்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
.

 கொரனா கோவிட் நோய் தொற்றின் காரணமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பொது சுகாதாரதுறையின் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் சானிடைசர் மற்றும் முககவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தியாகிகளை கௌரவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும். மேலும், சிறப்பாக பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்து நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத்துறை அலுவலர்களும் குடியரசு தினவிழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், தங்களது அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களையும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். குடியரசு தினவிழாவில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார். 

 கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, கோட்டாட்சியர்கள்;, அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர். 


 .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்