முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்

செ.வெ.எண்:45 நாள்: 26.01.2022 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் 95 பயனாளிகளுக்கு ரூ.51,42,453ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

 -------------------




தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்; குடியரசு தின விழா நிகழ்ச்சி இன்று (26.01.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார்.




இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், காவல்துறையில் 80 நபர்களுக்கு மெடல், 44 நபர்களுக்கு சான்றிதழ், கொடிநாள் நிதி வசூல் செய்தவர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, வருவாய்த்துறை, மாவட்ட தேர்தல் பிரிவு, மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம், பள்ளி கல்வித்துறை, மாவட்ட விளையாட்டு அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அலகு, துணை ஆணையர் (மாநில வரி) கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், சிறந்த மாணவர் விருது என மொத்தம் 604 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.






 மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (பயறு) விசைத் தெளிப்பான் ஃ தார்பாலின் மற்றும் 2020-21 ஆம் ஆண்டில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் என மொத்தம் 6 பேருக்கு ரூ.45,130ஃ- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.6,28,000ஃ- மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மகளிர் திட்டம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.18,11,000ஃ- மதிப்பில் வங்கி பெருங்கடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் - தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுவினர் 10 பேருக்கு ரூ.7,50,000ஃ- தொழில் கடன், மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (ருலுநுபுP) மற்றும் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் (PஆநுபுP) 2 பேருக்கு ரூ.13,18,000ஃ- கடன் உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் ரூ.13,573ஃ- மதிப்பில் ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் ஒரு ஏழை முஸ்லிம் மகளிர்க்கு சிறு தொழில் துவங்க மானியம், கூட்டுறவுத் துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.4,00,000ஃ- மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழு கடன், வருவாய்த்துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) 62 பயனாளிகளுக்கு ரூ.1,76,750ஃ- மதிப்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணம்ஃகல்வி உதவித் தொகைஃ திருமண உதவித்தொகை மற்றும் மாதாந்திர முதியோர் உதவித்தொகை என மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ.51,42,453ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 





கொரோனா தொற்று காரணமாக அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மூலம் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.




 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் திரு.அபிஷேக் டோமர், இ.கா.ப., கூடுதல் ஆட்சியர் ஃ மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சரவணன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்