முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்‌ மாசித் திருவிழா முன்னேற்பாடு பணிகள். குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்





தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்‌ மாசித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்‌ கூட்டம் மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில் நடைபெற்றது‌



தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா 07.02.2022 முதல்‌ 18.02.2022 வரை கொண்டாடுதல்‌ தொடர்பான முன்னேற்பாடுகள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ வைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (03.02.2022) நடைபெற்றது.‌ திருக்கோயில்களில்‌ திருவிழாக்கள்‌ நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால்‌ வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும்‌ இல்லாத வகையில்‌ நடத்துதல்‌ தொடர்பாக நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா 07.02.2022 முதல்‌ 18.02.2022 வரை 12 தினங்கள்‌ கொண்டாடப்படவுள்ளது. மாசித் திருவிழா நிகழ்ச்சியில்‌ தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்‌ என எதிர்பார்;க்கப்படுகிறது. 


எனவே பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், சுகாதார முறையில் விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள குடிநீர் வடிகால் வாரியம் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குரும்பூர் -குரங்கன்தட்டு, திருச்செந்தூர் தெப்பக்குளம் ஆகிய நீரேற்று நிலையங்களிலும் தேரோட்டம் நடைபெறும் பாதைகளும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையிலும் திருக்கோயில் பகுதிகளில் குப்பைக்கூளங்கள் சேராதபடிக்கும் சுகாதாரமாக வைத்திடவும், ஈ, கொசுக்களின் தொல்லை இல்லாமல் இருக்க நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளித்திடவும், திருவிழா காலங்களில் மருத்துவ குழுவினரை நியமித்து 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதியுடன் அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்திடவும், தொலைதொடர்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பள்ளது.


மேலும் கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக மீன் வளத்துறையின் மூலம் நீச்சல், கடலாள், முத்துக்குழி ஆகிய பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்பு துறையினரும் உயிர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு திருவிழா காலங்களில் தீயணைப்பு ஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பபட்டும், மருத்துவ ஊர்தியும் எந்த நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


திருவிழா காலங்களில் திருக்கோவில் உள்ளும், புறமும் சுவாமி சப்பரத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கிடவும் வீதிகளில் உள்ள தற்காலிக கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போதிய பாதுகாப்பு வழங்கிடவும், தேரோட்டம் அன்று தேருக்கு முன்பும் பின்பும் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருக்கோவில் சுற்றுவட்டார தெருக்கள் மற்றும் திருக்கோவில் முழுவதும் பழுதடைந்த தெருவிளக்குகளை பழுதுகள் நீக்கி சீரமைத்திடவும், பாதாள சாக்கடை அமைந்துள்ள பகுதிகளில் வர்;ணங்கள் பூசி எச்சரிக்கை பலகை வைத்திடவும், திருக்கோவிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்பு தங்கும் விடுதிகள், கழிவறைகள் அனைத்தும் சீரமைத்து சுகாதாரம் பேண நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த சாலைகளை சீரமைத்திட நெடுஞ்சாலைத்துறையினருக்கும், பழுதான தேர்கள் சீரமைத்திடவும், தெப்ப தேர்களின் கட்டமைப்புகளை உறுதிசெய்திடவும் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழாவினை சிறப்பாக நடத்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.அமுதா, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஃ செயல் அலுவலர் திரு.குமரதுரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...