முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்டாத்தி ஊராட்சி பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டபணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு



நாள்: 16.02.2022

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்  நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட முள்ளன்விளை, குமாரபுரம், பட்டான்டிவிளை  ஆகிய  பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் 


தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், நட்டாத்தி ஊராட்சி முள்ளன்விளையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் இணைய வழி வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்துவதை பார்வையிட்டதோடு, மாணவிகளிடம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து கேட்டறிந்து சிறப்பான முறையில் வகுப்புகள் நடத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தின் அருகாமையில் உள்ள மகளிர் சுய உதவிக் கட்டிடத்தினை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



குமாரபுரம் கிராமத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.90 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு  உரக் கொட்டகையினை பார்வையிட்டதோடு, மண்புழு உரம் தயாரிக்கும் முறையினை ஆய்வு செய்து, இங்கு தயாரிக்கப்படும் மண்புழு உரத்தினை ஊராட்சிமன்றம் வாயிலாக பொது மக்களுக்கு விற்பனை செய்ய  ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பட்டான்டிவிளை கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் கழிவு நீர் வாயிலாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இங்கு அறிய வகை மூலிகை செடிகள், கீரைகள், பாரம்பரிய பழவகைகள் உற்பத்தி செய்திட ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



எஸ்வி.பி.எஸ் செல்வமணி நகர் பகுதியில் அமைந்துள்ள நட்டாத்தி ஊராட்சி மன்ற சமுதாய நலக் கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும்  நெகிழி கழிவுகளை தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டதோடு, இதன் வாயிலாக கிடைக்பெறும் ஊதியம் குறித்து கேட்டறிப்பட்டது. மேலும், நெகிழி கழிவுகளை மறுசுழற்சி செய்து வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டது. 



நட்டாத்தி பகுதி சாலையோரங்களில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரினை, நிலத்தடி நீராக மாற்றுவதற்கு  மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பில்  மழைநீர் சேகரிப்பு அகழி வெட்டும் பணியினை பார்வையிட்டதோடு மழைக்காலத்திற்கு முன்னதாக பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்கள் பயணத்தின் போது தெரிவித்தார்கள்.


நடைபெற்ற ஆய்வின் போது, திருவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுரேஷ் (வ.வ), திரு.ஆண்டோ (கி.ஊ), மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சுகந்தி பாலின், ஒன்றிய பொறியாளர் திருமதி.முத்து, நட்டாத்தி ஊராட்சி மன்ற தலைவா் செல்வி.சுதாகலா,  உதவி பொறியாளர் திரு.பிரேம்சந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்