முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7500 கோடியில் 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டம்


செவ்வாய் 15, மார்ச் 2022 



தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் "கதி சக்தி" திட்டத்தின் கீழ் ரூ.7500 கோடியில், 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. 


இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன், சுங்கத்துறை ஆணையர் தினேஷ் கே.சக்கரவர்த்தி, வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் துணைத் தலைவர் பீமல்குமார், தென்னக ரயில்வே மதுரை கோட்ட மூத்த வர்த்தக துணை மேலாளர்  பிரசன்னா, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன், இந்திய துறைமுக ரயில்  கழக வர்த்தக வளர்ச்சி உதவி பொது மேலாளர் ரமேஷ் பாபு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சங்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் கூறியதாவது "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் கதி சக்தி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது வெளித் துறைமுக திட்டத்தில் ரூ.7500 கோடி மதிப்பில் ஆயிரம் மீட்டர் நீளத்துடன் கூடிய 2 சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 18 மீட்டர் ஆழம் கொண்ட கப்பல்களை கையாள முடியும். இதன் மூலம் துறைமுக ஆணையத்துக்கு 4.10 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை கையாளுவதற்கான கொள்முதல் உருவாக்கப்படும்.


இந்த திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சரக்குப் பெட்டகங்கள் கொள்ளவுடைய பெரிய கப்பல்களை  கையாள முடியும். பொது, தனியார் கூட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதோடு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக 965 ஏக்கர் நிலப்பரப்பை வ.உ.சி. துறைமுகம் ஒதுக்கி உள்ளது. இதில் 745 ஏக்கர் நிலப்பரப்பு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


வ.உ.சி. துறைமுக ஆணையத்துக்கு தேவையான தண்ணீரில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மூலம் 3 மில்லியன் லிட்டரை பெற்று வருகிறது. மேலும் வாழவல்லான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 750 கிலோ லிட்டர் குடிநீரையும், மங்களக்குறிச்சியில் உள்ள துறைமுகத்திற்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 1400 கிலோ லிட்டர் குடிநீரையும் பெற்று வருகிறது. 2025-ம் ஆண்டில் துறைமுகத்தின் தண்ணீர் தேவையானது 6.30 மில்லியன் லிட்டர்  என கணக்கிடப்பட்டுள்ளது. 


எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு துறைமுக நிலையத்தில் ரூ.144 கோடி செலவில் 5 மில்லியன் லிட்டர் உப்புநீரை நன்னீராக்கும் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. ரயில் சரக்குப்பெட்டிகளில்  உள்ளேயும், வெளியிலும் எடையை கண்காணிப்பதற்காக ரூ.23 லட்சம் செலவில் 140 மெட்ரிக் டன் மின்னணு ரயில் எடை பார்க்கும் செயலி துறைமுக ரயில் மார்செல்லிங் சேமிப்பு கிடங்கில் நிறுவப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...