முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

 





தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்

-------------

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2வது சுற்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.03.2022) துவக்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையினை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.



பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: 

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் மூலமாக 4 மாதங்களுக்கு மேல் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 



கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் 1,10,200 கால்நடைகள் கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து 40 நாட்களுக்குள் 1,10,200 கால்நடைகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் முகாம்கள் நடத்தி அங்குள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறையினர், தடுப்பூசிகள் சரியான தட்பவெப்ப நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக குளிர்சங்கிலி முறையில் தடுப்பூசிகளை கொண்டு சென்று தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடப்படுவதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் அவை ஆரோக்கியமாக இருக்கும். எனவே விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் வராமல் காத்து வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் மரு.ராஜன், துணை இயக்குநர் மரு.ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் மரு.அன்டனி சுரேஷ், மரு.சந்தோசம் முத்துக்குமார், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.ஆனந்தராஜ், மரு.சையத் அபுதாகிர், தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.ஜஸ்டின், தூத்துக்குடி மாநகராட்சி 1வது வார்டு உறுப்பினர் திருமதி.காந்திமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்