முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக ஓவியர்தினத்தில் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சி

 



உலக ஓவியர்தினம் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சிகள் நடத்துதல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு

                தூத்துக்குடி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக  6 வயது முதல் 16 வயது வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில்; சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், மற்றும் கராத்தே ஆகிய கலைகளில பகுதி நேரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

                தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று  ஓவிய பயிற்சி பட்டறை நடத்திடவும் அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபுசார்ந்த ஓவியங்கள் துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பானை, மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில்; நடத்தப்படவுள்ளது.   இம்முகாம் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில்; வருகின்ற 24-04-2022 (ஞாயிற்றுகிழமை)  அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பிற்பகல் 3.00 மணிக்கு மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில்; தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். 

மேலும், கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்கள், பயிற்சி சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.   இவ்வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலையார்வமிக்க மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...