முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூய்மை பாரதம் குறித்து. அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்

 


தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

---------------------------

தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (23.04.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசியதாவது:


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எல்லா உள்ளாட்சிகளுக்கும் தமிழகம் தூய்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி இருக்கிறார்கள். தமிழகம் தூய்மை மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒரு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எல்லா அமைப்புகளும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது போன்று நமது தூத்துக்குடியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாநகராட்சியுடன் இணைந்து ‘தூய்மையான தூத்துக்குடி, தூய்மை நமது பெருமை” என்ற ஒரு அடைமொழியோடு மாநகராட்சி முழுமையாக தூய்மைப்படுத்துவதற்கு ஒரு முயற்சி எடுக்கிறார்கள். 


வருகிற 30.04.2022 அன்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் எல்லா கல்லூரிகளில் உள்ள என.;எஸ.;எஸ்., என்.சி.சி. மாணவர்களை ஈடுபடுத்த உள்ளார்கள். அதுபோல பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் சார்பில் அவர்களது நிறுவனங்களையும்,  குடியிருப்பு சங்கங்கள், அதுபோல் சேம்பர் ஆப் காமஸ் உள்ளிட்ட எல்லா அமைப்புகளுமே தங்கள் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் அதுபோல பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டையும், சுற்றுப்பகுதியையும், தெருவையும் தூய்மையாக வைக்க வேண்டும் என்று எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 


இத்தூய்மை பணி நடைபெறும் அன்று அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனைத்து துறை அலுவலகங்களிலும், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட  அனைத்து  பகுதியுமே சுத்தப்படுத்த உள்ளார்கள். இது வெற்றிகரமாக அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை. மேலும் கடற்கரை மற்றும் பிரதான சாலைகளை சுத்;தம் செய்கிறார்கள். அதுபோல் எல்லா தெருக்களில் குப்பையை எடுத்து மாநகராட்சி குப்பை கிடங்கில் போட்டுவிட திட்டமிடப்பட்டுள்ளது. 


மேலும் அன்றைய தினத்தில் மக்கி போகாத குப்பையான நெகிழியை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் பைகள் வழங்கப்பட உள்ளது. இது நிச்சயம் வெற்றியடைய மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால் தூத்துக்குடி மாவட்டத்தினை தூய்மை மாவட்டமாக மாற்ற முடியும். 


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறிப்பாக பஜாரில் வணிக நிறுவனங்கள் உள்ள இடங்களில் கழிவறைகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது  என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசினார்.

கூட்டத்தில்  மாநகராட்சி ஆணையர் திருமதி.தி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.சரவணன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்