முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 


தூத்துக்குடியில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்

---------------------------

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் சிலை அருகில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.04.2022) தொடங்கி வைத்தார். மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லோக பாலாஜி சரவணன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசுகையில் ....

விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

 நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை இணைந்து விபத்தில்லா தூத்துக்குடியை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மாதம்தோறும் சீட் பெல்ட் அணிதல், ஹெல்மெட் அணிதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த மாதம் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 நமது மாவட்டத்தில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மொபைல் போன் பயன்படுத்திய வண்ணம் வாகனங்களை இயக்குவதை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். வாகனங்களில் செல்லும்போது மொபைல் போனில் அழைப்புகள் வந்தால் சாலையோரம் வாகனத்தினை நிறுத்தி பேசிவிட்டு பின்னர் செல்ல வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பேசினார். 

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.விநாயகம், வட்டாட்சியர் திரு.செல்வக்குமார்,  வாகன போக்குவரத்து ஆய்வாளர் திரு.மயிலேறும் பெருமாள்,  வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் (நிலை ஐ) திரு.பெலிக்ஸ் மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...