முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

 


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு 

-----------------------

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.10.2022) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 3ம் கேட் பாலம் என்பது மிகவும் சிக்கலான பாலம். இந்த பாலமானது தூத்துக்குடி ரயில்வே கேட்டுக்கு வடபுறமும், தென்புறமும் இணைக்கக்கூடியது. இந்த பாலத்தினை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.  இந்த பாலத்தில் மொத்தம் 12 டெக்குகள் உள்ளது. ஓவ்வொரு டெக்குக்கும் இடையே இணைப்பு உள்ளது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 டெக்குகள் பழுதடைந்து சீல்; செய்யும் நிலை ஏற்பட்டது. இப்பழுதினை கண்டுபிடித்து கடந்த 2ம் தேதியில் இருந்து சீரமைப்பு பணியை செய்து வருகிறார்கள். பணிகள் முடிந்துவிட்டது. இரண்டு இணைப்புகளுக்கு இடையே ரப்பர் பொறுத்தப்பட்டு நாளைக்கு இரவு போக்குவரத்து சரி செய்யப்பபடும். பொதுமக்களின் வசதிக்காகவும், சாலை பாதுகாப்பையொட்டியும் மிக விரைவாக செய்து முடித்திருக்கிறோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


ஆய்வில் கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை பொறி.ஆறுமுகநயினார், உதவி கோட்ட பொறியாளர் பொறி.திருவேங்கட ராமலிங்கம், உதவி பொறியாளர் பொறி.ஜெயஜோதி தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.சு.சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் திரு.செல்வக்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...