சாயர்புரத்தில் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி.

 சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் சாயர்புரத்தில் தூய்மை பணி.


  கடந்த 14-10-2022  வெள்ளி கிழமையன்று   சாயர்புரத்தில்  உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா தினத்தை ஒட்டி சாயர்புரம் பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது.

     இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். 

சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி திரு.சுப்பிரமணியன்  தொடங்கி வைத்து தூய்மை இந்தியா பணியை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  வார்டு கவுன்சிலர் திரு.கண்ணன், மேற்பார்வையாளர் திரு.நித்திய கல்யாண் உறுதிமொழி கூறினார். மாணவ மாணவிகள் சாயர்புரம் தெருவில்  தூய்மை பணி செய்தனர்.

 இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் இயந்திரவியல் துறை தலைவர் திரு.கனிசெல்வன், திரு.தாமஸ், திரு.சுப்பிரமணியன், திரு.கனகராஜ்,திரு.எபனைசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்