முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் கூட்டம்

  


தூத்துக்குடியில் கடந்த 6-11-2022  அன்று காலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் திரு எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சங்கத்தின் மாநில ஆலோசகர் திரு மு வெற்றிவேல் அவர்கள் கலந்துகொண்டு சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மற்றொரு விழாவினை பற்றியும் பணியாளர்களின் குறைபாடுகளை பற்றியும் எடுத்துரைத்தார் 

 


 இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கிளை சங்கத்தின் சார்பில் வருகின்ற 13/11/ 22 .அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகின்ற நமது சங்கத்தின் முப்பெரும் விழாவின் கலந்து கொள்வது சம்பந்தமாகவும் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது 

 இதில் தலைமைச் சங்கம் கீழ்க்கண்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 


தீர்மானம் 1. 

மருத்துவமனையில் போதுமான நிரந்தர பணியாளர்கள் இல்லை ஆகையினால் நிரந்தர பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் அல்லது கூடுதலாக பணியாளர்களை நியமித்து விட வேண்டும்


 தீர்மானம் 2 

அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு  மருத்துவமனைகளில்  அனைத்து தரப்பட்ட உயர் சிகிச்சைகள் அரசு ஊழியர்களுக்கு கிடைத்திடும் வகையிலும் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்சிடி ஸ்கேன் ஆஞ்சியோகிராம்போன்ற பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் கிடைத்திட வழிவகை காண வேண்டும்


 தீர்மானம் .3 

செவிலிய உதவியாளர்களுக்கு அடிப்படை பணியாளர்களுக்கு வழங்குவது போல ஊதியம் உள்ளது இந்த பணிக்கு பயிற்சி எடுத்து பணிபுரிந்து வருவதால் ஊதியம் இவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் விடுபட்டுள்ளது இதை சீரமைப்பு  சரி செய்து தரவும் கல்வித் தகுதி குறைவாக உள்ள பதிவரை எழுத்தர் பணியாளர்களுக்கு உள்ள சம்பள விகிதத்தை விட செவிலியர் உதவியாளர்களுக்கு சம்பள விகிதம் குறைவாக உள்ளது இதை தலைமைச் சங்கம் கவனத்தில் கொண்டு இதற்கு ஆவண செய்ய வேண்டும்என்பதைப் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

மேலும் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அதை முப்பெரும் விழாவில் அறிவிப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது 

இக்கூட்டத்தில் செவிலியர் உதவியாளர்கள் மருத்துவமனை பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு இந்த  நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள் இறுதியில் திரு முத்துகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்